Categories
உலக செய்திகள்

வணிக வளாகத்தில் நின்ற பெண்… திடீரென வந்த போன் கால்… செய்திகேட்டு கதறி அழுத பெண்… எதற்கு தெரியுமா?

தனக்கு கொரோனா தொற்று உறுதியானதை அறிந்து பொது இடத்தில் பெண் ஒருவர் கதறி அழுத காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது

சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலியை எடுத்து வரும் நிலையில் அதனை தடுக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதோடு உலக நாடுகள் முழுவதிலும் தொற்றுக்கான மருந்தை கண்டுபிடிக்கும் பணியும் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் சீனாவில் தனக்கு கொரோனா உறுதியானதை தொலைபேசி மூலமாக அறிந்த பெண் பொது இடத்தில் கதறி அழுதுள்ளார். பெய்ஜிங்கில் இருந்த வணிக வளாகம் ஒன்றில் நின்றுக்கொண்டிருந்த பெண்ணிற்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது.

அதில் அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்து இருந்தது. அழைப்பை எடுத்த அவரிடம் உங்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். இதனை கேட்டதும் அந்தப் பெண் கதறி அழ தொடங்கினார். அவரைக் கண்ட அருகில் இருந்தவர்கள் அவரது நிலைமையை உணர்ந்து அங்கிருந்து விலகி செல்கின்றனர். மற்றொரு காட்சியில் அந்த பெண் வணிக வளாகத்தின் வெளியே அமர்ந்து இருக்கிறார் அப்போது ஆம்புலன்ஸ் வந்து சுகாதார ஊழியர் அப்பெண்ணை அழைத்து செல்கின்றார். தற்போது அந்த காணொளி சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வரும் நிலையில் பலரும் விரைவில் அந்தப்பெண் குணமடைய வேண்டுமென வேண்டி வருகின்றனர்.

https://youtu.be/odWWkff0r9Y

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |