Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பிறந்த பெண் குழந்தை… தாயால் பார்க்க முடியவில்லை… கண்ணீரில் குடும்பம்..!!

பிரசவத்தின் போது பெண் உயிரிழந்ததால் உறவினர்கள் மருத்துவமனையை குற்றம் சாட்டி தகராறு செய்தனர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கோட்டார்  பகுதியை  சேர்ந்தவர்கள் சுரேஷ்குமார்- பவித்ரா தம்பதியினர். பவித்ரா கர்ப்பமாக இருந்த நிலையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று பவித்ராவுக்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது. ஒட்டுமொத்த குடும்பமும் குழந்தை பிறந்த சந்தோஷத்தில் மூழ்கி இருக்க சில மணி நேரத்தில் பெரும் சோகம் அவர்களுக்குக் காத்திருந்தது. சிறிது நேரத்திலேயே குழந்தை பெற்ற பவித்ராவிற்கு அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட செய்வதறியாது தவித்த உறவினர்கள் தனியார் மருத்துவமனைக்கு பவித்ராவை அழைத்துச் சென்றனர். ஆனால் அந்த மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாததால் அரசு மருத்துவமனை ஒன்றிற்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு பவித்ராவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர் இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் குழந்தை பிறந்த மருத்துவமனைக்கு சென்று உங்களின் முறையற்ற சிகிச்சையால் தான் பவித்திரா இறந்து விட்டதாக குற்றம் சுமத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இது குறித்து முறையான விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படுமென கூறினார். இதனைத் தொடர்ந்து பவித்ராவின் குடும்பத்தினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Categories

Tech |