உக்ரைனில் 10 வயதுடைய ஒரு சிறுமி 80 வயது முதுமை தோற்றம் அடைந்து அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
உக்ரேனில் உள்ள Vinnytsia பகுதியில் வசிக்கும் Iryna Khimich என்ற 10 வயது சிறுமி progeria என்னும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே சிகிச்சைக்காக அவர் வரைந்த ஓவியங்களை விற்பனை செய்து நிதி திரட்டியிருக்கிறார். இந்நிலையில் அமெரிக்காவிற்கு முக்கிய சிகிச்சைக்காக செல்ல வேண்டியபோது திடீரென்று சிறுமி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிறுமியின் தாயார் இணையதளப்பக்கத்தில் கூறியிருக்கிறார். மேலும் சிறுமி, பாரிஸிற்கு ஒருமுறையாவது சென்று வர ஆசைப்பட்டிருக்கிறார். மேலும் தன் ஓவியங்களை பிரான்சில் காட்சிக்காக வைக்க விரும்பியுள்ளார்.
ஆனால் தற்போது சிறுமி பரிதாபமாக இறந்துவிட்டார். இந்த அரிய வகை நோய் பாதித்த இச்சிறுமிக்கு ஒவ்வொரு வருடமும் 10 வருடங்களில் மனித உடலில் உண்டாகும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அவர் சிகிச்சைக்கு நிதி கொடுத்து உதவிய மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.