Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் பார்ட்டி… போலீசாரிடம் வாக்குவாதம் செய்த பெண்… திருவள்ளூரில் பரபரப்பு…!!

பெண் இன்ஜினியர் மதுபோதையில் ஜீப்பை ஓட்டி விபத்தை ஏற்படுத்திவிட்டு போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மேல்நல்லாத்தூரில் ஒரு தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஹரியானா மாநிலத்தை சேர்ந்த 21 வயது பெண் என்ஜினீயர் பயிற்சிக்காக பணியில் சேர்ந்துள்ளார். இந்நிலையில் மணவாள நகர் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தனது ஒரு ஆண்டு பணி நிறைவு பெற்றதை கொண்டாடுவதற்காக இந்த பெண் இன்ஜினியர் அனைவருக்கும் விருந்து அளித்துள்ளார்.

இதனையடுத்து விருந்து முடிந்ததும் அந்த பெண் இன்ஜினியர் மதுபோதையில் அவரது ஜீப்பை ஓட்டி சென்றுள்ளார். அப்போது அந்த ஜீப்பானது கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த வேன் மீது மோதிவிட்டது. ஆனால் இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படாமல் தப்பித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு துரை பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்திய போது, மது போதையில் அந்தப் பெண் என்ஜினீயர் கட்டுப்பாடின்றி போலீசாரிடம் பேசியுள்ளார்.

அதோடு மீண்டும் ஜீப்பை ஒட்டி  செல்வதாக அடம்பிடித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய போதும் காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லுமாறு அந்த பெண் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து சுமார் 2 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின் அவரின்  நண்பர்களை தொடர்பு கொண்ட போலீசார் அந்த பெண்ணின் செயல் குறித்து அவர்களிடம் தெரிவித்துள்ளனர்.

அதன்பின் அவர்களது நண்பர்கள் சம்பவ இடத்திற்கு வந்ததும் பெண் இன்ஜினியரை எச்சரித்து போலீசார் அனுப்பினர். அதோடு மறுநாள் காலை காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வருமாறு கூறியுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் கூறும்போது, இந்த விவகாரம் தொடர்பாக அந்த பெண் இன்ஜினியரிடம் விசாரணை நடத்திய பின் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்படும் என கூறியுள்ளனர்.

Categories

Tech |