Categories
உலக செய்திகள்

“நீ வேலைக்கு வர தேவையில்லை!”.. பொய் கூறிவிட்டு கால்பந்து போட்டிக்கு போன பெண்.. முதலாளியிடம் மாட்டிய சுவாரஸ்யம்..!!

அலுவலகத்தில் பொய் கூறிவிட்டு பணிக்கு செல்லாமல் கால்பந்து விளையாட்டு காணச் சென்ற இளம்பெண் முதலாளியிடம் மாட்டிய சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.

பல திரைப்படங்களில் கதாநாயகன் அலுவலகத்தில் பொய் கூறிவிட்டு விடுமுறை எடுக்கும் காட்சிகள் இடம் பெறும். உதாரணமாக தில்லுமுல்லு, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களை கூறலாம். இந்நிலையில் உண்மையில் இது போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

இங்கிலாந்தில் இருக்கும் Ilkley என்ற பகுதியில் வசிக்கும் Nina Farooqi என்ற பெண், தன் தோழியுடன் கால்பந்து போட்டியை கான ஆசைப்பட்டிருக்கிறார். அவரது தோழி டிக்கெட்டும் வாங்கிவிட்டார். எனினும் தன் அலுவலகத்தில் விடுமுறை கேட்க என்ன செய்யலாம்? என்று சிந்தித்திருக்கிறார்.

எனவே பொய் கூறிவிட்டு, கால்பந்து போட்டியை காண்பதற்கு உற்சாகமாக சென்றுவிட்டார் Nina. அதன்பின்பு வீடு திரும்பிய Nina மறுநாள் பணிக்கு கிளம்பியிருக்கிறார். அப்போது அவரின் அலுவலக முதலாளி தொலைபேசியில் தொடர்பு கொண்டு “இனிமேல் நீ சிரமப்பட்டு பணிக்கு எல்லாம் வர தேவையில்லை” என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த Nina நடந்தது புரியாமல் குழம்பியிருக்கிறார். அதாவது Nina கால்பந்து காணச் சென்று குதூகலமாக கொண்டாடியிருக்கிறார். மேலும் சுமார் 60,000 நபர்களுக்கு மேல் மைதானத்தில் இருப்பதால் நம்மை யாரும் கவனிக்க மாட்டார்கள் என்று கருதியிருக்கிறார். ஆனால் இங்கிலாந்து கோல் போட்டவுடன் Ninaவும் அவரின் தோழியும் உற்சாகமாக கொண்டாடும் சமயத்தில் ஒரு கேமரா அவர்களை ஃபோகஸ் செய்து விட்டது.

எனவே அவரின் முகத்தை, முதலாளி மட்டுமன்றி உலகம் முழுக்க தொலைக்காட்சியில் பார்த்து விட்டது. ஒருபுறம் தான் தொலைக்காட்சியில் தெரிந்து பிரபலமான மகிழ்ச்சி, மறுபுறம் தன் பணி பறிபோன சோகத்தில் மூழ்கிவிட்டார் Nina.

Categories

Tech |