நண்பர்களுடன் சென்ற இளம்பெண் அவர்களாலேயே கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மெக்சிகோவில் டன்னா என்ற இளம்பெண் தனது நண்பர்களான மென்டோன்சா, டாமரில்லோ, டொஸ்கேனோ மற்றும் காஸ்டிலோ ஆகிய நால்வருடன் ஒன்றாக வீட்டில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது அவர்களிடையே வாக்குவாதம் ஏதோ ஏற்பட்டுவிட டன்னாவை இழுத்துச் சென்று ஒரு அறையில் உள்ளே போட்டு பூட்டி சக நண்பர்களை கத்தியால் குத்தி கொலை செய்தனர். இதனை வீட்டில் இருந்த சிறுவன் ஜோஸ் பார்த்துக் கொண்டிருந்தான். அதனை கவனித்த நண்பர்கள் வெளியில் யாரிடமும் சொல்லக் கூடாது என மிரட்டிவிட்டு உயிரிழந்து கிடந்த பேனாவின் சடலத்தை ஒரு பையில் போட்டு எடுத்துக் கொண்டு காரில் புறப்பட்டனர்.
அவர்கள் சடலத்தை ஓரிடத்தில் இருந்து கீழே தூக்கி வீசி அதனை தீ வைத்துக் கொளுத்திய காணொளி காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்றது. காணொளியில் சடலத்தை கொளுத்திய பின் நண்பர்கள் அனைவரும் கார் ஒன்றில் ஏறி சென்று விடுகின்றனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் மென்டோன்சா, டாமரில்லோ மற்றும் டொஸ்கேனோவை கைது செய்தனர். நால்வரில் ஒருவரான காஸ்டிலோ தலைமறைவாகியுள்ள நிலையில் காவல்துறையினர் விரைந்து தேடி வருகின்றனர்.