Categories
உலக செய்திகள்

இறந்து கிடந்த மகள்.. கொலை வழக்கில் கைதான தாய்.. உச்சநீதிமன்றத்தின் கேள்வி..!!

கனடாவில் வசிக்கும் பெண் ஒருவர் தன் மகளை கொன்ற வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. 

கனடாவில் Scarborough-ல் வசிக்கும் சிண்டி அலி என்ற பெண் தன் வீட்டிற்குள் கொள்ளையர்கள் புகுந்துவிட்டார்கள் என்றும் தன் மகள் பேச்சு மூச்சில்லாமல் கிடக்கிறார் என்றும் காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து காவல்துறையினரின் அவரின் வீட்டிற்குள் சென்றபோது அவரின் மகள் Cynara பேச்சு மூச்சில்லாமல் கிடந்துள்ளார்.

அவருக்கு முதலுதவி அளித்த போது மயங்கி விழுந்துவிட்டார். எனவே காவல்துறையினர், கொள்ளையர்களை தேடியபோது, அவர்கள் திருடிச்சென்ற ஆதாரங்கள் எதுவும் இல்லை. இதனால் சிண்டி அலி மீது சந்தேகமடைந்த காவல்துறையினர் மகளை கொன்றதாக குற்றம் சாட்டி அவரை கைது செய்தனர்.

இந்நிலையில் தற்போது இந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. அதாவது Cynara, செரிப்ரல் பால்சி என்ற பாதிப்பு உடையவராம். அதாவது அவரால் பேச, நடக்க மற்றும் தானாகவே சாப்பிட இயலாது. தன் உணர்வுகளையும் சிரிப்பதன் மூலமாகவோ அடிப்பதன் மூலமாகவோ தான் வெளிப்படுத்த முடியுமாம்.

மேலும் அவருக்கு அடிக்கடி வலிப்பு உண்டாகுமாம். அதாவது அவர் தன் மகளுக்கு வலிப்பு ஏற்பட்ட போது அதிர்ச்சியடைந்து, அவரை காப்பாற்றுவதற்காக ஏதேனும் செய்திருந்தால் கூட அவர் உயிரிழந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று ரொறன்ரோ உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது. எனவே இந்த வழக்கு தொடர்பாக மீண்டும் விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |