Categories
உலக செய்திகள்

பொறுமையிழந்ததால் கொன்றுவிட்டேன்.. வாக்குமூலம் அளித்த பிளே பாய்..!!

பிரிட்டனில் இளம்பெண் கொலை வழக்கில் கைதான இளைஞர் ஒருவர், தன்னை திருமணம் செய்ய மறுத்ததால் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். 

பிரிட்டனை சேர்ந்த 25 வயது இளம்பெண் Mayra Zulfiqar. இவர் பாகிஸ்தானிற்கு தன் உறவினரின் திருமணத்திற்காக சென்றிருக்கிறார். அப்போது அவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து ரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் அவர் சித்திரவதை செய்யப்பட்டு துப்பாக்கியால் சுடபட்டு இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே Zahir Jadoon மற்றும் Saad Butt ஆகிய இரு இளைஞர்கள் தங்களை திருமணம் செய்து கொள்ளுமாறு Mayraவை வற்புறுத்தி வந்ததாகவும் அதனை அவர் மறுத்ததும் தெரியவந்ததால் காவல்துறையினர் அவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் Zahir ஐ காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Zahirரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பிளே பாயாக சுற்றி வந்தேன். என்னை திருமணம் செய்ய Mayra விரும்பவில்லை. மேலும் ஒரு வீடியோவை காட்டி என்னை பிளாக்மெயில் செய்து கொண்டிருந்தார். எனவே பொறுமை இழந்த நான் அவரை கொன்று விட்டேன் என்று கூறியிருக்கிறார்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த Saad Butt அவராகவே காவல்துறையினரிடம் வந்து சரணடைந்துள்ளார். மேலும் அவர் தனக்கு Mayraவின் கொலையில் எந்த வித தொடர்பும் இல்லை என்று கூறியிருக்கிறார். எனினும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |