சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் நேற்று கல்லூரி மாணவி ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, தமிழகத்தை உலுக்கி உள்ளது. இந்த சம்பவத்தில் மாணவி சத்யா காதலித்ததாக கூறப்படும் சதிஷ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். மாணவி உயிரிழந்த துக்கத்தால் அது தந்தையும் மதுவில் விஷம் கலந்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவத்தை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திவரும் நிலையில் தற்போது இந்த கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.