சாலையில் நடந்து சென்ற 16 வயது சிறுமி கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
கனடாவில் இருக்கும் பிராம்டன் நகரில் 16 வயது சிறுமியான டயானா மானன் க்ரீன் ஸ்ட்ரீட் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வேகமாக வந்த கார் ஒன்று அவர் மீது மோதி விட்டு நிற்காமல் போய்விட்டது. அந்த நேரம் அவ்வழியாக வாகனத்தில் வந்த நபர் ஒருவர் தலையில் பலத்த காயத்துடன் இருந்த டயானாவை பார்த்து அதிர்ச்சியடைந்து மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து காவல் துறையினருக்கு தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்தவர்கள் விசாரணை மேற்கொண்டதில் டயானா ரொறண்ரோ பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. அதோடு இச்சம்பவம் தொடர்பாக ஆதிநாத் சங்கர் என்பவரை கைது செய்யப்பட்டு காரை ஏற்றி சிறுமியை கொலை செய்து விட்டு நிற்காமல் சென்றதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.