சென்னை ஆதம்பாக்கம் ராஜா தெருவை சேர்ந்தவர் தயாளன். இவர் ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளர். இவருடைய மகன் தான் சதீஷ். சதீஷ் வயது 23. அதே ராஜா தெருவுக்கு எதிர்ப்பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் ராமலக்ஷ்மி. இவர் தலைமை காவலராக பணி செய்து வருகிறார்கள். ராமலட்சுமி தலைமை காவலராக பணி செய்து வருகிறார்கள். இவருடைய மகள்தான் சத்யா வயது 20.
இவர் சென்னை தி.நகரில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்கள். இன்றைக்கு வழக்கமாக கல்லூரி செல்வதாக பரங்கிமலை ரயில் நிலையத்தில் காத்திருந்தார். அப்போது சதீஷ் சத்யாவை ஒருதலை காதலிப்பதாக கூறப்படுகிறது. சத்தியாவை தொடர்ந்து பின்தொடர்ந்து வந்துள்ளார். அவர்களுக்குள் பேச்சுவார்த்தை ஏற்பட்டபோது, சத்யாவை ரயில் முன்பு அவர் தள்ளிவிட்டு உள்ளார் .
ரயில் அந்த நேரத்தில் சத்யா விழுந்ததால் தலை நசுங்கி சத்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து. அவர்கள் 2 தனிப்படைகளை அமைத்து குற்றவிலையை தேடி வருகின்றனர்.