Categories
திருச்சி நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

உறவினருடன் வருகையில்….. கழிவறை சென்று வருகிறேன்…. மாயமான பெண்…

கழிவறைக்கு சென்று வருவதாக கூறி சென்ற பெண் காணாமல் போனதால் பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது

நாகை மாவட்டம் மயிலாடுதுறை தாலுக்காவை சேர்ந்தவர் வரதராஜன். இவரது மகள் கனிமொழி கடந்த 15ஆம் தேதி உறவினர் மோகனசுந்தரம் என்பவருடன் கோயம்புத்தூரில் இருந்து திருச்சி வந்துள்ளார். திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இறங்கிய கனிமொழி கழிவறைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். வெகுநேரமாகியும் கனிமொழி உறவினரிடம் திரும்பி வரவில்லை. இதனால் கனிமொழியை உறவினர் பல இடங்களில் தேடியுள்ளார். எங்கு தேடியும் கிடைக்காததால் மோகனசுந்தர் கனிமொழியின் தந்தை வரதராஜனுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த கனிமொழியின் தந்தை வரதராஜன் மற்றும் உறவினர்கள் கனிமொழியை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காத கனிமொழியை கண்டுபிடித்து கொடுக்குமாறு திருச்சியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் வரதராஜன். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து மாயமான கனிமொழியை விரைந்து தேடி வருகின்றனர்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |