திருமணம் நடக்கவிருக்கும் நிலையில் இளம்பெண் காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கலப்பை பட்டி கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குட்டிப்பாப்பா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சுபத்ரா தேவி என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் சுபத்ராவின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்வதற்காக மாப்பிள்ளை பார்த்து வரும் பங்குனி மாதத்தில் திருமணம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
இதனை அடுத்து துறையூரில் உள்ள தனது சித்தி வீட்டிற்கு வந்திருந்த சுபத்ரா தேவி அதிகாலை நேரத்தில் திடீரென காணாமல் போய்விட்டார். இதனை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் சுபத்திரா தேவியை பல இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இச்சம்பவம் குறித்து உடனடியாக கங்கைகொண்டான் போலீசில் அவரது பெற்றோர் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சுபத்ரா தேவியை தீவிரமாக தேடி வருகின்றனர்.