காணாமல் போன இளம் பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூவிழி என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்ற பூவிழி மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனையடுத்து அவரது பெற்றோர் பூவிழியை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர்.
ஆனாலும் அவர் கிடைக்காததால் சண்முகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காணாமல் போன இளம் பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர்.