11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி திடீரென காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள கோரையாறு கிராமத்தில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோபிகா என்ற மகள் உள்ளார். இந்த சிறுமி அரசு மேல்நிலை பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் வீட்டிலிருந்து வெளியே சென்ற கோபிகா நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் அவரை தேடி பார்த்துள்ளனர்.
ஆனாலும் கோபிகா கிடைக்காததால் தங்கராஜ் பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கோபிகாவை யாரேனும் கடத்தி சென்றனரா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.