லண்டனில் 4 நாட்களுக்கு முன்பு மாயமான 12 வயது சிறுமி குறித்த அடையாளங்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
தெற்கு லண்டனில் வசிக்கும் ஜொனித்தியா என்ற 12 வயதுடைய சிறுமி மாயமாகியுள்ளார். இச்சிறுமி கடந்த 4 தினங்களுக்கு முன்பு தன் வீட்டிலிருந்து வெளியில் சென்றிருக்கிறார். அதன்பின்பு அவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் காவல்துறையினர் சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்டிருக்கின்றனர்.
மேலும் சிறுமி தொடர்பில் தகவல் தெரிந்தால் உடனடியாக தங்களிடம் தெரிவிக்குமாறு பொது மக்களிடம் உதவி கேட்டுள்ளனர். மேலும் சிறுமியின் உயரம் ஐந்து அடி ஏழு அங்குலம் என்றும் காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள்.