லண்டனில் இளம்பெண் ஒருவர் மாயமாகி ஒன்பது நாட்களுக்கு மேல் ஆகிவிட்டதால் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
லண்டனில் வசிக்கும் 20 வயது இளம்பெண் அக்னீஸ் அகோம். இவர் கடந்த 9 ஆம் தேதி அன்று தன் குடியிருப்பிலிருந்து வெளியே சென்றுள்ளார். அதன் பின்பு அவர் வீடு திரும்பவில்லை. இதனைத்தொடர்ந்து அவர் மாயமானதாக கடந்த 11ஆம் தேதி அன்று காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்தவர். எனினும் கடந்த ஐந்து வருடங்களாக பிரிட்டனில் தான் வசித்து வருகிறார். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் அவரது உயரம் மற்றும் மாயமான அன்று அணிந்திருந்த ஆடைகள் தொடர்பான விவரங்களை வெளியிட்டிருக்கிறார்கள். மேலும் டிடெக்டிவ் அதிகாரியான நீல் ஜான் தெரிவித்துள்ளதாவது, அவர் மாயமாகி ஒன்பது நாட்களுக்கு மேலாகிவிட்டது.
எனவே அவரது பாதுகாப்பில் அக்கறை வைத்து அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். ஆனால் அவர் மாயமானதிலிருந்து, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை தொடர்பு கொள்ளவில்லை. எனவே அக்னீஸ் குறித்து தகவல் அறிந்தவர்கள், உடனடியாக தங்களிடம் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்.