லண்டனில் பள்ளிச்சீருடையுடன் வீட்டிலிருந்து வெளியேறிய சிறுமி, மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனில் பெக்ஹம் என்ற பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமி ஷெனான் ரெய்ட் . இவர் கடந்த 11 ஆம் தேதி அன்று தன் குடியிருப்பிலிருந்து வெளியே சென்றிருக்கிறார். அதன்பின்பு அவர் மாயமாகியுள்ளார். வீட்டிலிருந்து வெளியேறும் போது பள்ளி சீருடையுடன் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அந்த மாணவியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள காவல்துறையினர், சிறுமியின் நிலை தொடர்பில் கவலையடைந்துள்ளனர். எனவே மாணவி தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் உடனடியாக தங்களிடம் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.