தாத்தா பாட்டியை கட்டி அணைக்க சிறுமி செய்த செயல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி வருகின்றனர். இதனால் தனது குழந்தைகளை கூட வாரி அணைக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. அவ்வகையில் கலிபோர்னியாவை சேர்ந்த 10 வயது சிறுமி லிண்ட்சே என்பவரின் தாத்தா-பாட்டி கொரோனா தொற்றினால் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் தாத்தா பாட்டி மீது கொண்ட பாசத்தினால் அவர்களை கட்டி அணைக்க நினைத்த சிறுமி புதிய யுக்தி ஒன்றை கண்டறிந்துள்ளார். பாலிதீன் பைகளால் ஆன பெரிய திரை ஒன்றை உருவாக்கி அதில் கைகளை நுழைத்துக் கொள்ளும் பை ஒன்றை ஓட்டியுள்ளார். அதன்பிறகு தனது தாத்தா பாட்டியை ஆசை தீர கட்டி அணைத்து தனது பாசத்தை வெளிப்படுத்தியுள்ளார். சிறுமியின் இந்த செயல் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.