நைஜீரியாவில் ஒரு இளம் பெண்ணை நான்கு நபர்கள் சேர்ந்து சவுக்கால் அடிக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியாவில் ஒரு இளம்பெண், ஆண்கள் சிலர் மற்றும் பெண் நண்பர்களோடு சேர்ந்து ஒரு பிறந்த நாள் பார்ட்டியில் பங்கேற்றுள்ளார். அதில், அவர் மதுபானம் அருந்தும் வீடியோவை அவரின் தந்தை பார்த்திருக்கிறார். ஆனால், அந்த பெண் தான் அருந்தியது மது பானம் இல்லை என்று கூறியிருக்கிறார்.
எனினும், அந்த பெண்ணை அவர் படிக்கும் பள்ளிக்கு அழைத்துச் சென்று ஆசிரியர்களிடம் தன் மகள், மதுபானம் குடித்ததால் அவருக்கு உரிய தண்டனை கொடுங்கள் என்று அவரின் தந்தை கூறியிருக்கிறார். அது இஸ்லாமிய பள்ளி என்பதால், ஆசிரியர்கள் இஸ்லாமிய கட்டுப்பாட்டின் படி, சவுக்கால் அந்த மாணவியை அடிக்கிறார்கள்.
அந்த மாணவி, வலி தாங்க முடியாமல் அடியை தடுக்க முயற்சிக்கிறார். அதற்கிடையில் அவரின் ஹிஜாப் விலக, அடியை வாங்கிக்கொண்டே அதனை சரி செய்கிறார். தற்போது அந்த வீடியோ இணையதளங்களில் வெளியாகியிருக்கிறது. இதனால், அப்பள்ளியினுடைய தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். அந்த மாணவியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.