Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“அவன் மிரட்டி இப்படி பண்ணிட்டான்” அதிர்ச்சியடைந்த பெற்றோர்… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

16 வயது சிறுமியை கட்டிட தொழிலாளி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் கட்டிட தொழிலாளியான மாதப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் வேலை பார்ப்பதற்காக அருகில் இருக்கும் கிராமத்துக்கு சென்ற மாதப்பன் வீட்டில் தனியாக இருந்த 16 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்ட காரணத்தால் சிறுமியை அவரது பெற்றோர் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இரண்டு மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரிடம் விசாரித்தபோது கட்டிட தொழிலாளியான மாதப்பன் என்பவர் மிரட்டி பலமுறை தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த சிறுமி தெரிவித்துள்ளார். இது குறித்து தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருக்கும் மாதப்பனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |