Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

விடுதிக்கு அழைத்து சென்ற ஊழியர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

தனியார் நிறுவன ஊழியர் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு தனியார் கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வருகின்றார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குமார் அந்த சிறுமியை கூடலூரில் இருக்கும் ஒரு விடுதிக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குமாரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |