Categories
சினிமா தமிழ் சினிமா

பொண்ணு ரெடி… மாப்பிள்ளை எங்கே…? இணையத்தை கலக்கும் ஷெரினின் புகைப்படம்….!!

நடிகை ஷெரின் இணையதளத்தில் தன் புகைப்படத்தை வெளியிட்டு மாப்பிள்ளை தேடி வருகிறார்.

தமிழ் சினிமாவில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ஷெரின். இதை தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். அதன்பின் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார்.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷெரின் தனது புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார்.அந்த வகையில் அவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு ஏராளமான கமெண்ட்டுகள் குவிந்து வருகிறது.

ஏனென்றால் அப் புகைப்படத்தில் ஷெரின் மணக்கோலத்தில் இருக்கிறார்.மேலும் பொண்ணு ரெடி மாப்பிள்ளை எங்கே? என்று கேள்வி கேட்டு பதிவு செய்துள்ளார். இதனை பார்த்த பலரும் நான் இருக்கிறேன் என்றும் பொண்ணுக்கு பாட தெரியுமா? ஆட தெரியுமா? என்று கேள்வி எழுப்பி கமண்ட் செய்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/CMmvxK5lM8G/

Categories

Tech |