Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“அவங்க தான் காரணம்” காதலி எடுத்த விபரீத முடிவு…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

காதலன் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த காதலியும் சானிடைசர் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் நாகராஜ்-மங்கலம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் பரத் சென்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பள்ளியில் படிக்கும் போதே பரத்தும், 18 வயது மாணவி ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இது குறித்து அறிந்த அந்த மாணவியின் பெற்றோர் பரத்திடம் செல்போனில் பேசக்கூடாது என தனது மகளை கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த பரத் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து பரத்தின் இறப்பிற்கு அந்த மாணவியின் பெற்றோர் தான் காரணம் என நினைத்து கோபத்தில் இருந்த உறவினர்கள் அவர்களின் வீட்டுக்கு சென்று கதவு, ஜன்னல்களை அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து தனது காதலன் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த அந்த மாணவி வீட்டில் இருந்த சானிடைசரை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அதன்பிறகு மயங்கிய நிலையில் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |