காவல் நிலையம் முன்பு பெண் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அகிலா என்ற மகள் இருக்கின்றார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பாரதி என்பவருடன் அகிலாவிற்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு யாழினி என்ற மகளும், பரத்குமார் என்ற மகனும் இருக்கின்றனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அகிலா தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இதனையடுத்து அகிலாவிற்கு அமரதீபம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அகிலாவிடம் இருந்து 8 பவுன் தங்க நகை மற்றும் பணத்தை அமரதீபம் வாங்கியுள்ளார். இந்நிலையில் அகிலா தனது தாயுடன் குன்னம் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது தன்னிடம் இருந்து வாங்கிய 8 பவுன் தங்க நகை மற்றும் பணத்தை அமரதீபத்திடம் இருந்து வாங்கி தர வேண்டுமென அகிலா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து காவல்துறையினர் அமரதீபத்தை அழைத்து பேசிய போது அகிலாவிற்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த அகிலா தனது ஸ்கூட்டரில் வைத்திருந்த மண்ணெண்ணை பாட்டிலை எடுத்து உடல் முழுவதும் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து படுகாயமடைந்த அகிலாவை காவல் துறையினர் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அமரதீபத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.