Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“வேற வீட்டிற்கு போகலாம்” ஒதுக்கிய உறவினர்கள்… மாணவிக்கு நடந்த சோகம்…!!

11 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள கட்டூர் பகுதியில் சூர்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் பூந்தமல்லியில் உள்ள ஒரு துணிக் கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இதற்கு கோவர்த்தினி என்ற மகள் உள்ளார். இவர் பூந்தமல்லியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பணிக்கு சென்றுவிட்டு இரவு சூர்யா தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்ததால் பலமுறை கதவை தட்டியுள்ளார்.

ஆனால் கதவு திறக்கப்படாததால் ஜன்னல் வழியாக பார்த்தபோது கோவர்த்தினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனடியாக மங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று மாணவியின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது, சூர்யாவின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டதால் தாயுடன் வளர்ந்த கோவர்த்தினி இந்த வீட்டில் இருந்து வேறு வீட்டிற்கு செல்லலாம் என கூறியுள்ளார்.

ஆனால் அதற்கு அவரது தாய் அவரை திட்டியுள்ளார். மேலும் அவர்களது உறவினர்கள் இவர்களிடம் பேசாமல் இருந்துள்ளனர். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த கோவர்த்தினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |