Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இதுக்கு போய் இப்படி பண்ணலாமா… பெண் எடுத்த விபரீத முடிவு… குழந்தைகளை தவிக்க விட்ட தாய்…!!

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் பகுதியில் நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சென்ற 10 வருடங்களுக்கு முன் கார்த்திகைப்பட்டி பகுதியை சேர்ந்த ராமலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு 2 பிள்ளைகள் இருகின்றனர். இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே சில மாதங்களாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் ராமலட்சுமி சென்ற ஒரு வாரத்திற்கு முன்பு சமத்துவபுரம் பகுதியில் வசித்து வரும் தனது கணவன் நாகராஜன் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு திடீரென ராமலட்சுமி தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். அதனைக் பார்த்த அக்கம்பக்கத்தினர் ராமலட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின் மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இச்சம்பவம் குறித்து ராமலட்சுமியின் தாயார் வெள்ளைத்தாய் என்பவர் மாரனேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் மாரனேரி காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |