Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என்ன நடந்துச்சுன்னு தெரியல… இளம்பெண்ணின் விபரீத முடிவு… போலீஸ் விசாரணை..!!

இளம்பெண் மின்விசிறியில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள சிந்தாரிப்பேட்டை பகுதியில் ஜெயசங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு கூலித்தொழிலாளி. இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். சில வருடங்களுக்கு முன்பு லட்சுமி மனநலம் பாதிக்கப்பட்டதாக மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இதையடுத்து சென்ற வியாழக்கிழமை அன்று வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் லட்சுமி திடீரென மின்விசிறியில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிந்தாரிப்பேட்டை காவல்துறையினர் லட்சுமியின் உடலை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை குறித்து சிந்தாதிரிப்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |