Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கல்யாணமாகி ஒரு வருடம்தான் ஆச்சு…. அதிர்ச்சியில் உறைந்த கணவர்… மனைவியின் விபரீத முடிவு…!!

திருமணமாகி ஓர் ஆண்டுகளே நிலையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள என்.ஆர்.கே நகரில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள வெல்டிங் ஒர்க் ஷாப்பில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சுபஜனா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கடந்த ஓராண்டு முன்பு தான் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திடீரென அதிகாலை சுபஜனா தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்த கோபாலகிருஷ்ணன் அருகில் இருந்தவர்கள் உதவியோடு அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

ஆனால் அங்கு அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து திருப்பூர் வடக்கு காவல் துறையினர் அங்கு விரைந்து சென்று சுபஜனாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுபஜனா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |