Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“என்னை ஏற்றுகொள்” தொந்தரவு செய்த வாலிபர்…. பள்ளி மாணவி எடுத்த விபரீத முடிவு…!!

காதலை ஏற்றுக்கொள் என வாலிபர் வற்புறுத்தியதால் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாரீஸ் புரம் பகுதியில் இருளாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆகாஷ் என்ற மகன் உள்ளார். இவர் பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியை காதலித்ததால், தினமும் அந்த மாணவி பள்ளிக்கூடம் சென்று கொண்டிருக்கும் போது வழியில் நின்று கொண்டு தன்னை காதலிக்குமாறு அந்த மாணவியை வற்புறுத்தியுள்ளார். மேலும் அந்த மாணவியை மிரட்டி உள்ளார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவி தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் அந்த மாணவியை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து அந்த மாணவியின் பெற்றோர் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆகாஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |