காதல் விவகாரத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள சூளகிரி பகுதியில் விவசாயியான முனிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 19 வயது இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென அந்த இளம்பெண்ணிடம் பேசுவதை முனிராஜ் தவிர்த்து வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த அந்தப் பெண் இதுகுறித்து முனிராஜிடம் கேட்டபோது அவர் அந்த பெண்ணை ஆபாசமாக திட்டியுள்ளார். இந்நிலையில் வாழ்க்கையை வெறுத்த அந்த இளம்பெண் தனது வீட்டில் உள்ள மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார்.
இதனை அடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த இளம்பெண்ணை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து இளம் பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முனிராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.