இனரீதியாக கிண்டல் செய்யப்பட்டதால் சிறுமி தற்கொலை செய்த சம்பவத்தில் நீதி கேட்டு ஏராளமானோர் பங்கேற்று பேரணி மேற்கொண்டனர்
கடந்த வருடம் ஜூன் மாதம் 27ஆம் தேதி லண்டன் லாங்க்சில் இருக்கும் இர்வெல் ஆற்றில் 12 வயது சிறுமி சுக்ரி குதித்து தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து அவரது தாய் கூறுகையில் இனரீதியாக தனது மகள் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளானதே அவள் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆனால் காவல்துறையினர் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், இது கருப்பின ஆதரவு போராட்டக் குழுவினரை பேரணி நடத்துவதற்கு தூண்டியுள்ளது.
சுக்ரி கருப்பு இனத்தை சேர்ந்தவர் என்பதாலேயே காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதற்கு தாமதம் செய்வதாக பேரணி நடத்தியவர்கள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். அமைதியான முறையில் நடத்தப்பட்ட இந்த பேரணியில் சிறுமி சுக்ரிக்கு நீதி வேண்டும் என்ற வாக்கியங்களை கையில் ஏந்தி இருந்தனர். இதனிடையே முன்னாள் பிரதமர் சர்ச்சிலின் நினைவுச் சின்னத்தை பாதுகாப்பதற்காக காவல்துறையினர் குவிந்திருந்தனர். ஆனால் பேரணியை மேற்கொண்டவர்கள் மிகவும் அமைதியான முறையில் எந்த வன்முறையும் இல்லாமல் கடந்து சென்றனர்.
அவர்கள் ஹேட் பூங்காவில் தொடங்கி வெஸ்ட்மின்ஸ்டரில் இருக்கும் கல்வித்துறை வரை பேரணியாக அணிவகுத்து சென்றனர். சுக்ரியின் மரணத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் விதமாக என்ற சூழலும் இல்லை என கடந்த ஆண்டு காவல்துறையினர் முடிவு செய்தனர். ஆனால் சுக்ரியை சக மாணவர்கள் நீச்சல் தெரியாது என கிண்டல் செய்ததாகவும், அதுவே அவரை இந்த முடிவை எடுப்பதற்கு தூண்டியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.