Categories
தேசிய செய்திகள்

பெண்களே ” கல்வி உதவித்தொகை”… வெளியான புதிய உதவித் திட்டம்..!!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் பெண்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலாம் ஆண்டு இளங்கலை மற்றும் முதுகலை m-tech மற்றும் M.E இரண்டு ஆண்டுகள் படிக்கும் பெண்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளன. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 20 பேருக்கு உதவித்தொகை கிடைக்கும்.ஏரோஸ்பெஸ் இன்ஜினியரிங் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங், ஸ்பேஸ் இன்ஜினியரிங் மற்றும் ராக்கெட் இன்ஜினியரிங் படிக்கும் மாணவிகளுக்கு இது பயன்பெறும். ஆண்டுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வரை கல்வி உதவித் தொகை கிடைக்கும். 2020-21 ஆம் ஆண்டில் முதலாம் ஆண்டில் படிக்கும் மாணவர்கள் 10 பேருக்கு இந்த உதவித்தொகை கிடைக்கும்.

2020-21 ஆம் ஆண்டில் முதல் ஆண்டில் படிக்கும் M.E / m-tech/ எம்எஸ்சி பாடத்திட்டத்தில் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும். இந்த கல்வி உதவித்தொகை பெற JEE தகுதித் தேர்வு மற்றும் கேட் தேர்வு எழுதி இருக்க வேண்டும். அதில் 70 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அவர்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சத்து 86 ஆயிரம் வரை கல்வி உதவித்தொகை கிடைக்கும். மேலும் உதவித்தொகை தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நிறுவனங்கள் பரிந்துரைக்கப்பட கூடிய அனைத்து சோதனை மற்றும் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும்.

இந்த விண்ணப்பங்களை அனுப்ப வரும் 31ஆம் தேதி கடைசி என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் https//rac.gov.in என்ற இணையத்தில் கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |