கொரோனா தொற்றினால் ஏற்படும் மரணங்களை விட பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகள் குறித்து கவலை அளிப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்
ஜெனிவாவில் நேற்று காணொளி வாயிலாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கொரோனா தொற்றை தடுக்க உலக நாடுகளின் சுகாதார அமைப்புகள் மிகவும் திண்டாடி வருகின்றது. அதிலும் பிரசவத்திற்கு கர்ப்பிணிப் பெண்கள் சிகிச்சை பெறமுடியாமல் மரணம் அடையும் அபாயம் அதிகமாகியுள்ளது. தொற்று உறுதியாகி அறிகுறிகள் தீவிரமாக இல்லாத தாய்மார்கள் குழந்தைக்கு பாலூட்டுவதை தடுக்க வேண்டிய அவசியமில்லை.
கொரோனா தொற்றால் குழந்தைகள் மற்றும் முப்பது வயதுக்கு உட்பட்ட மன அழுத்தம், பாலியல் வன்கொடுமை, ஆன்லைன் வன்கொடுமை, தேவையற்ற கற்பம் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்படும் அபாயம் அதிகமாகியுள்ளது” எனக் கூறினார். இதுவரை சீனாவில் இருந்து பரவிய கொரோனா தொற்றினால் 76 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு 4.5 லட்சத்திற்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ளனர். உலக அளவில் பொருளாதாரம் வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது.