Categories
உலக செய்திகள்

உக்ரைன் வீரர்களை ஊக்குவிக்க…. நிர்வாண புகைப்படங்களை அனுப்பும் பெண்கள்…!!!

உக்ரைன் நாட்டை சேர்ந்த பெண்கள் தங்கள் நாட்டு இராணுவ படையினருக்கு, ஆடைகளின்றி இருக்கும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் அனுப்பி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

உக்கரை நாட்டின் மீதான ரஷ்ய போர் 160 நாட்களைக் கடந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த பெண்கள் தங்கள் நாட்டு படையினரை ஊக்குவிப்பதற்காக கவர்ச்சியாக தாங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும்  வீடியோக்களையும் அவர்களுக்கு அனுப்பி கொண்டிருக்கிறார்கள்.

படை வீரர்களின் மன தைரியத்தை அதிகரிப்பதற்காக இவ்வாறு அனுப்பப்படுவதாக கூறப்பட்டிருக்கிறது. அந்நாட்டின் தலைநகரில் இயங்கும் ஒரு குழுவினர் இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறார்கள். அந்த குழுவினருக்கு நாடு முழுக்க இருக்கும் பெண்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வந்தடைகின்றன. அதன் பிறகு, அவை வீரர்களுக்கு அனுப்பப்படுகிறது.

Categories

Tech |