Categories
உலக செய்திகள்

“அய்யயோ!”.. 6300 அடி உயரத்திலிருந்து விழுந்த பெண்கள்… அதிர வைக்கும் வீடியோ..!!

ரஷ்யாவில் இளம்பெண்கள் இருவர் சுமார் 6,300 அடி உயரத்திலிருந்து தவறி விழும் பதற வைக்கும் வீடியோ காட்சி வெளியிடப்பட்டுள்ளது.

ஒரு மலை முகட்டில் ஊஞ்சல் அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் இளம்பெண்கள் இருவர் ஆடிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது திடீரென்று ஊஞ்சலின் கம்பி அருந்ததில் இரண்டு பெண்களும் கீழே விழுந்துவிட்டனர். அங்கிருந்தவர்கள், அவர்களின் நிலை என்ன ஆகுமோ? என்ற பதற்றத்தில் இருக்க அதிர்ஷ்டவசமாக மலைமுகட்டில் கீழே அமைக்கப்பட்டிருந்த மரத்தாலான பிளாட்பாரத்தில் விழுந்துவிட்டனர்.

உடல் சிதறி உயிரிழந்து விடுவார்கள் என்று அனைவரும் பதற்றத்துடன் பார்த்துக் கொண்டிருக்க சிறு காயங்களுடன் இருவரும் தப்பியது நிம்மதியை அளித்துள்ளது. அவரது உறவினர்கள் உடனடியாக பதறியடித்துக் கொண்டு இருவரையும் அழைத்து சென்றுவிட்டனர். காவல்துறையினர் ஊஞ்சல் கட்டப்பட்டிருந்த பகுதியில் பாதுகாப்பு தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Categories

Tech |