Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

பெண்களே “இந்த 5 பழக்கத்தை கைவிடுங்கள்”… உங்கள் லைப் சூப்பரா இருக்கும்..!!

நாம் ஒவ்வொருவருக்கும் பலவித பழக்கங்கள் இருக்கும். ஆனால், பெண்கள் முக்கியமாக இந்து ஐந்து பழக்கங்களை கைவிட வேண்டும். இதனால் குழந்தைபேறு, சருமப் பிரச்னைகள் அதிகமாக ஏற்படக்கூடும். அவற்றை குறித்துப் பார்க்கலாம்.

1. முதலில் பெண்களுக்கு புகைப்பிடித்தல் பழக்கம் கூடவே கூடாது. இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானோர் புகைப்பிடித்தலுக்கு அடிமையாகின்றனர். இந்தப் பழக்கத்தினால், கருப்பப்பை சார்ந்த பிரச்னைகள் ஏற்படக்கூடும். அதோடு வயது முதிர்ந்த தோற்றத்தையும் கொடுக்கும்.

2. வெந்நீர் குளியல். வெந்நீரில் குளிப்பது இதமாக இருக்கலாம் ஆனால், வெந்நீர் உங்கள் சருமம் மற்றும் கூந்தலை பாதிக்க கூடியது. இது உங்கள் சருமத்தை உலர் தன்மை கொள்ளச்செய்து, நீர்த்தன்மையை பாதிக்கிறது.

3. சோடா பயன்பாட்டை குறைத்துக்கொள்ளுங்கள். இது உங்கள் சமருத்தின் நீர்த்தன்மையை பாதித்து, முன்கூட்டியே வயோதிக்கத்தை அதிகமாக்குகிறது.

4. சருமம் பொலிவுடன் இருக்க நல்ல தூக்கம் அவசியமானது. எந்த சூழலிலும் தினமும் 8 மணி நேரம் தூங்குவது எனும் பழக்கம் வைத்துக்கொள்ளுங்கள். நல்ல தூக்கம் இல்லாதது உங்கள் சரும நலனை பாதிப்பதோடு, கரு வளையங்கள் தோன்றச்செய்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.

5. இரவு படுக்கைக்கு சென்ற பின்பு அதிக வெளிச்சம் தரக்கூடிய வகையில் மொபைல் அல்லது டிவி பார்க்கும் பழக்கத்தை கைவிடவேண்டும். இவை உங்கள் முகத்தின் சருமத்தை பாதிக்கும். அதோடு கண்களுக்கும் கேடு விளைவிக்கும்.

Categories

Tech |