ரிஷப ராசி அன்பர்களே….!! இன்று நண்பர்கள் மூலம் நல்ல தகவல்கள் கிடைக்கும். நாடு மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். கற்றவர்களின் பாராட்டுக்களால் உங்களுக்கு கனிவு கூடும். மதிப்பும் , மரியாதையும் உயரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். உங்களுடைய தனித்திறமையை நீங்கள் இன்று நிரூபிப்பீர்கள். உங்களுடைய முயற்சிகள் இன்று வெற்றியை கொடுப்பதாகவே இருக்கும். அதே போல் தொழில் வியாபாரம் செழித்து மனநிறைவையும் உருவாக்கும். ஆதாய பணவரவு கிடைக்கும். பெண்கள் இன்று புத்தாடை , நகை வாங்க கூடும். இன்று எந்த ஒரு காரியத்திலும் தெளிவான முடிவு எடுக்க முடியாத குழப்பம் இருக்கும் , அதை பார்த்துக் கொள்ளுங்கள்.
சொன்ன சொல்லை காப்பாற்ற விரும்புவீர்கள். அதனால் மதிப்பும் , மரியாதையும் கூடும். எதிர்ப்புகளை சமாளித்து முன்னேறி எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனையே கொடுக்கும். இன்றைய நாள் ஓரளவு வெற்றி பெறும் நாளாகவே இருக்கும். அனைவரின் ஆதரவோடு அனைத்து காரியத்தையும் சிறப்பாக செய்வீர்கள். இன்று நீங்கள் வெளியில் செல்லும்போது வெள்ளை நிற கைக்குட்டை அல்லது வெள்ளை நிறத்தாளான ஆடை அணிந்து சென்றால் காரிய வெற்றிக்கு வழிவகுக்கும். அதேபோல இன்று நீங்கள் காலையில் எழுந்ததும் விஷ்ணு பகவானை மனதார நினைத்து வழிபடுவது வெற்றிக்கு வழிவகுக்கும்.நீங்கள் நினைத்த காரியம் நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்டமான எண் : 2 மற்றும் 3
அதிர்ஷ்டமான நிறம் : வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்