செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், தமிழ்நாட்டின் வேலை தமிழர்களுக்கே உறுதி செய்யப்பட வேண்டும். மாநில அரசு வேளையில் 100%, மத்திய அரசு மற்றும் தனியார் துறைகளில் 90 சதவீதம் வேலைவாய்ப்பை உறுதி செய்ய உரிய சட்டத்தை தமிழக அரசு இயற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
எல்லா மாநிலங்களிலும் அந்த மாநில அரசுகளில் 100 சதவிகித அந்த மாநில மக்களுக்குத் தான் வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். எதையும் நான் புதிதாக கேட்கவில்லை, மத்திய அரசு பதவிகளில் தான் நான் 90 சதவீதம் கேட்கிறேன், தனியார் துறையில் 90% கேட்கிறேன். குஜராத்தில் குஜராத்திகளுக்கு தான் வேலை, அந்த மாநில அரசு பதவிகளில்… கர்நாடகாவில் கர்நாடகாவுக்கு தான் அந்த மாநில அரசு பதவிகளுக்கு வேலை.
தெலுங்கானா – ஆந்திரா பிரிவின் போது கூட ஆந்திராவை சேர்ந்தவர்கள் தெலுங்கானாவில் வேலை செய்தால்,அவர்களை நாங்கள் வெளியேற்றுவோம் என்று தெலுங்கானா அரசு அறிவித்ததை ஏற்றுக்கொண்டு, ஆந்திரா அரசு நாங்கள் அவர்களை திரும்ப பெற்றுக் கொள்வோம் என்று படிப்படியாக திரும்பப் பெற்று, ஆந்திர மாநிலத்தின் உடைய வேலைவாய்ப்பில் அவர்களுக்கு தந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆக இது நியாயமான, நீதியான, அந்தந்த மாநில மக்களின் வாழ்வுரிமை பாதுகாப்பதற்கான ஒரு கோரிக்கை. இந்தியா முழுவதும் இந்த முறைதான் வேண்டும் என்பது தமிழக வாழ்வுரிமை கட்சி வலியுறுத்துகிறது. தமிழகத்தில் இருக்கும் வேலை வாய்ப்பு தமிழர்களுக்கு கொடுங்கள் என்று கேட்கிறோம். தமிழ்நாடு வேலையை தமிழர்களுக்கும், பீகார்காரர்களுக்கு உள்ள வேலையை பீகாரிக்கும் கொடுங்கள் என்று நாங்கள் கேட்கவில்லை.
தமிழக சட்டமன்றத்தில் சட்டம் திருத்தப்பட்டு தமிழ்நாட்டு அரசு பதிவுகளில் இனி தமிழ் எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் சேர்ந்தவர் வேண்டுமானாலும் டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதி அரசு பதவிக;ளில் அமரலாம் என்ற நிலையை மாற்றிய கட்சி தமிழக வாழ்வுரிமை கட்சி என தெரிவித்தார்.