ஒவ்வொரு குடும்பத்திற்கும் 12 ஆயிரத்து 500 வழங்க வேண்டும் என்று திமுக கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
கடந்த இரண்டு மணி நேரமாக 11 கட்சித் தலைவர்களும் ஆலோசித்த நிலையில் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆயிரம் ரூபாய் ரேஷன் கார்டுகளுக்கு தமிழக அரசு கொடுத்துள்ளது. போதாது இரண்டு மாதத்திற்கு மேலாக மக்கள் வீட்டில் முடங்கி இருக்கிறார்கள். ஏழை எளிய மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தமிழக அரசு ரூபாய் 5000மும், மத்திய அரசு ரூபாயை 7500 ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்க வலியுறுத்தி உள்ளார்கள்.
அதுமட்டுமில்லாமல் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் ரத்து மின் திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துளர்கள். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர வேண்டும் என்று வலியுறுத்தியதோடு மருத்துவ படிப்புக்கானஓபிசி ரிசர்வேஷன் (பிற்படுத்தப்பட்டோர்) மத்திய அரசு ரத்து செய்ததை எதிர்த்து நாடு முழுவதும் உள்ள கட்சிகள் எல்லாம் போராட்டம் நடத்தவேண்டும்.
கொரோனா காலத்தில் எப்படி போராட்டம் பண்ண முடியுமோ அப்படி போராட்டம் நடத்தவேண்டும் . கறுப்புக்கொடி காட்டுவது இது போன்ற விஷயங்களை போராட்டம் வடிவத்தில் செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு கட்சித் தலைவரும் நிறைய பேசியிருக்கிறார்கள். கே.எஸ் அழகிரி சிதம்பரத்திலிருந்து பேசி இருக்கிறார், திருமாவளவன் பாண்டிச்சேரியிலிருந்து காணொளியில் பங்கேற்றிருக்கிறார். வைகோ, முத்தரசன், பாலகிருஷ்ணன், ஐஜேகே கட்சியின் ரவி பச்சமுத்து, கொங்கு மக்கள் தேசிய கட்சியின் இருந்து ஈஸ்வரனும் பங்கேற்றுள்ளார்.