நாளை உள்நாட்டு விமான சேவை தொடங்க இருக்கும் நிலையில் தலைமைச் செயலாளர் சண்முகம் பயணிகள் விமான போக்குவரத்து செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
நாடு முழுவதும் உள்நாட்டு விமான சேவை நாளை முதல் தொடங்க இருக்கின்றது. இதனால் தமிழக தலைமை செயலாளர் சண்முகம் பயணிகள் விமான போக்குவரத்து செயலாளர் பிரதீப் சிங் கரோலாவுக்கு எழுதியுள்ள கடிதத்த்தில், சென்னைக்கு ஒரு நாளைக்கு 25 உள்நாட்டு விமானங்கள் மட்டுமே அனுமதிக்கவேண்டும். கோயமுத்தூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் இருந்தும் விமானங்களை இயக்கலாம்.
குறிப்பாக கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து குறைந்த அளவு விமானமே இருக்கவேண்டும். தமிழ்நாட்டிலிருந்து வெளி மாநிலங்களுக்கு போறதுக்கு எந்த பிரச்சனையும் இல்லை தமிழகத்தில் தரையிறங்குபவர்களுக்கு தான் நிறைய கட்டுப்பாடுகள் இருப்பதாகவும் அந்த கடிதத்தில் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.