பட்டாசு ஆலை வெடி விபத்தில் விபத்தில் இறந்த தொழிலாளர்களின் உடல்களை வாங்க மறுப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சக்திவேல் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தானது பட்டாசு மருந்துகளுக்கு இடையே ஏற்பட்ட உராய்வின் காரணமாக ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் இந்த தீ விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் விபத்தில் இறந்த தொழிலாளர்களின் உடல்களை வாங்க மறுப்பு தெரிவித்து வருகின்றனர். 9 பேரின் உடல்களுக்கு பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் போராட்டம் நடைபெற்று வருகின்றது. பட்டாசு ஆலை நிர்வாகம் இழப்பீடாக தலா ரூ.5 லட்சம் வழங்க கோரி உறவினர்கள் மருத்துவமனையில் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.