இந்தியாவில் தற்போது பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் கொடூரமான முறையில் அரங்கேறி வருகின்றன. இதையடுத்து தமிழகத்திலும் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் காவல்துறையிலும் சக பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல் துறையில் தங்களுடன் பணியாற்றும் சகபெண் காவல் அதிகாரிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் அதிகாரிகளுக்கு தகுந்த பாடம் விளைவிக்கும் வகையில் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாஜக மகளிரணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.