Categories
அரசியல் மாநில செய்திகள்

MGRஆட்சி மாதிரி கொடுங்க…! DMKஆட்சியை பாராட்டுவாங்க… ஐடியா கொடுத்த ஜெயக்குமார் …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  புரட்சித் தலைவர் எம்ஜிஆர் காலத்தில் நான் அப்போது பியூசி படித்துக் கொண்டிருந்தேன் தியாகராஜா கல்லூரியில், அப்போது ஆல் ரூட் பஸ் பாஸ் கொடுத்து விடுவார்கள். 15 ரூபாய் தான். ஆல்ரூட் பஸ் பாஸ் வாங்கிட்டால் போதும் எங்க வேண்டுமானாலும் எந்த ரூட்டில் வேண்டுமானாலும் எத்தனை பேருந்தில் வேண்டுமானாலும் போகலாம். அதுபோல நீங்கள் ஆல்ரூட் பஸ் பாஸ் இலவசமாக விலையில்லா மகளிருக்கு கொடுத்தால் பாராட்டுவார்கள்.

அதை விட்டுவிட்டு முன்னாடி பின்னாடி மட்டும் பிங்க் கலர் அடித்து விட்டால் அந்த பேருந்தில் எத்தனை பேர் பயன் பெறுகிறார்கள், குறிப்பிட்ட நேரத்தில் போகவும் முடியவில்லை, குறிப்பிட்ட நேரத்திற்கு பேருந்து வரவில்லை என்றால், பெண்களால் என்ன செய்ய முடியும். வேறு பேருந்தில் பணம் கொடுத்து தான் போக முடியும்.

ஆனால் இவர்களுக்கு டோக்கன் மாதிரி பஸ் பாஸ் மாதிரி கொடுத்து விட்டால் எந்த பேருந்து வேண்டுமானாலும் ஏறி கொள்ளலாம். அதை செய்யாமல் மக்களை மோசடி செய்து, ஆட்சிக்கு வந்த திமுக விடியாத அரசு, மோசமான திட்டங்களை, ஏமாற்றுத் திட்டங்களை விளம்பரத்தின் மூலமாக இன்றைக்கு முன்னிலைப்படுத்தி அதன் மூலம் ஒரு ஆதாயத்தை தேடிக் கொள்ளலாம் இது மக்களிடையே நிச்சயமாக நடக்காத ஒரு விஷயம் என விமர்சித்தார்.

Categories

Tech |