Categories
தேசிய செய்திகள்

“அனைவருக்கும் ஏற்றம் அளிக்கும் பட்ஜெட்”…. பிரதமர் மோடி பாராட்டு..!!

சிறப்பான மாற்றங்களைக் கொண்டு வந்து அனைவருக்கும் ஏற்றம் அளிக்கும் விதமாக இந்த ஆண்டு பட்ஜெட் அமைந்துள்ளதாக பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த பட்ஜெட் பற்றி அவர் கூறியதாவது:

கொரோனா காலகட்டத்திலும்  மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் சுகாதார திட்டங்களையும் வளர்ச்சியையும் நிதிநிலை அறிக்கை ஊக்கப்படுத்துகிறது. இந்த அறிக்கை நாட்டின் நம்பிக்கையை காட்டுகிறது. இதனால், உலகளவில் தன்னம்பிக்கையை வளர்க்கும். மேலும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகிறது. வேளாண் துறையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், விவசாயிகள் எளிதாக கடன் பெற முடியும். சாமானிய மக்கள் மீது வரிச்சுமையை இருக்கும் என்று பலரும் நினைத்தார்கள். இருப்பினும், நாங்கள் ஒரு வெளிப்படைத்தன்மை நிறைந்த பட்ஜெட்டில் கவனம் செலுத்தினோம்.

வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், நமது இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள், உள்கட்டமைப்பிற்கான புதிய பிராந்தியங்களை உருவாக்குதல், தொழில்நுட்பத்தை நோக்கி முன்னேறுதல் உள்ளிட்ட புதிய சீர்திருத்தங்களை கொண்டு வருவதற்கான அணுகுமுறையை இந்த பட்ஜெட்டில் எடுத்துள்ளோம். சிறப்பான மாற்றங்களை கொண்டுவந்து அனைவருக்கும் ஏற்றம் அளிக்கும் பட்ஜெட்டாக உள்ளது. நாட்டின் சுகாதார திட்டங்களை பட்ஜெட் ஊக்குவிக்கிறது. தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் கிழக்கு இந்திய மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |