Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சும்மா போனவன இடிச்சல….. ரூ12,00,000 கொடு….. இல்ல பஸ்ஸை கொடு…… அரசு பேருந்து ஜப்தி….!!

திண்டுக்கல் அருகே விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நஷ்ட ஈடு தராததால் விபத்தை ஏற்படுத்திய பேருந்தை ஜப்தி செய்ய காவல்துறையினர் உத்தரவிட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகாவிற்கு உட்பட்ட கும்மிலிபட்டியைச் சேர்ந்தவர் சின்னு. இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியில் சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்த போது  அரசு பேருந்து ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இதில் படுகாயமடைந்த அவர், இனி என்னால் பணிக்கு செல்ல இயலாது எனது குடும்பத்தை நான் காப்பாற்ற எனக்கு போக்குவரத்து கழகம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் ரூபாய் 12 லட்சத்து ஏழாயிரம் ரூபாயை சின்னுவிடம்  வழங்குமாறு போக்குவரத்து கழகத்திடம் உத்தரவிட்டது.

ஆனால் போக்குவரத்து கழகம் இழப்பீடு எதுவும் வழங்காததால் அவர் மீண்டும் நிறைவேற்றுவதற்கான மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் 2 ஆண்டுகள் கடந்தும் இழப்பீடு வழங்காததால் விபத்தை ஏற்படுத்தியதிண்டுக்கல் to திருச்சி வரை செல்லக்கூடிய அரசு பேருந்தை ஜப்தி செய்யுமாறு உத்தரவிட்டார். அதன்படி இன்று காலை கோர்ட் ஊழியர்கள் பேருந்தை ஜப்தி செய்தனர்.

Categories

Tech |