வங்கிகளில் இஎம்ஐ திருப்பிச் செலுத்த ஆறு மாத காலம் அவகாசம் அளிக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திமுக தலைவர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கிகளின் தவணை தொகையை இஎம்ஐ செலுத்தும் கால அவகாசம் ஆகஸ்ட் 31ம் தேதிக்கு மேல் நீடிக்கப்படாது என்ற செய்தி கொரோனா பேரிடரால் முடங்கியிருப்போருக்கு பேரதிர்ச்சி.
இந்திய பொருளாதாரம் நொறுங்கிருக்கின்றது என்றெல்லாம் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் திரு சக்திகாந்த தாஸ் ஆகஸ்ட் மாதம் பேசியிருக்கிறார். கொரோனாவின் தாக்கம் தெரிந்திருந்தும் கால அவகாசத்தை நீட்டிக்க மறுப்பதுதான் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் ஆரோக்கியமான அணுகுமுறையா?
மத்திய அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் கூறும் கடவுளின் செயல் கோட்பாடு மாநிலங்களுக்கு வழங்கப்படும் ஜிஎஸ்டி நிலுவைத் தொகை நிச்சயம் பொருந்தாது. ஆனால் வருமான இழப்பிற்கு உள்ளான மக்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் மிகச் சரியாகப் பொருந்த கூடும்.
ஒவ்வொருவரின் கையில் இருக்கக்கூடிய ரொக்கப்பணம் அல்லது வருமானம் என்ற நிதி ஆதாரத்தில் ரத்த ஓட்டம் தடைபட்டு இருப்பதால் தவணைத் தொகையை திருப்பிச் செலுத்த அளிக்கப்பட்டுள்ள கால அவகாசத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும்.
சமீபத்தில் கூட மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கியின் உபரி தொகையிலிருந்து 57 ஆயிரத்து 128 கோடி ரூபாயை கொடுப்பதற்கு ஒப்புதல் அளித்தத ரிசர்வ் வங்கிக்கு இது போன்ற ஏழை எளிய நடுத்தர மக்களுக்காக உதவி செய்ய முன்வருவது மிகப் பெரிய சவால் அல்ல என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்