Categories
மாநில செய்திகள்

எங்களுக்கும் கொடுங்க…! கிடைச்சு போச்சுன்னு குடித்த மக்கள்…! 143பேருக்கு காத்திருந்த அதிர்ச்சி …!!

தெலுங்கானாவில் கள்ளச்சாராயம் குடித்ததில் 143 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் விகராபாத் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கள்ளச்சாராயம் விற்றுள்ளனர். அதனை வாங்கிக் குடித்த அப்பகுதி மக்கள் சிறிது நேரத்திற்குப் பின் வாந்தி எடுத்து உடல்நிலை பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தனர். அதன்பின் கள்ளச்சாராயம் குடித்த 143 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 55 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்ததாகவும் 17 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் மீதமுள்ளவர்களின் உடல்நிலை சீராக உள்ளது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன் பின் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் உயிரிழந்த நபர் கள்ளச்சாராயம் குடித்து தான் உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்குமா? என்று கண்டறிய அவரது உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.ஆகையால் இது இயற்கைக்கு மாறான மரணம் என 174 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |