பேரிடர் கால சலுகை என மின் சார கட்டணத்தில் சலுகை வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் முக. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மின் கட்டணம் நடிகர் பிரசன்னா தெரிவித்த கருத்துக்களை சுட்டிக்காட்டியுள்ள முக.ஸ்டாலின் நான்கு மாத மின் நுகர்வு இரண்டு மாதமாக பிரிக்கப்பட்டு வசூலிக்கப்படுவது, தங்களிடம் நடத்தப்படும் பகல் கொள்ளையாக மின்நுகர்வோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா காலத்திலும் கூடுதல் மின் கட்டணம் வசூலித்து நுகர்வோரை துன்பத்திற்கு ஆளாகி இருப்பது கண்டனத்துக்குரியது.
மின்கட்டணத்தில் முந்தைய மாத கட்டணங்களை பேரிடர் நிவாரணமாக அறிவித்து ஆறுமாத கட்டணத்தில் சலுகை அளிக்க வேண்டும். மின் கணக்கீடு எடுக்க முடியவில்லை என்ற காரணத்தால் முந்தைய மாதங்களில் செலுத்திய கட்டணத்தை குறிப்பாக மார்ச் ஏப்ரல் மாதங்களில் செலுத்தலாம் என்று அதிமுக அறிவித்தது. ஆனால் அப்பாவி பொதுமக்கள் தற்போது ஏமாற்றம்தான் மிஞ்சியது.
கொரோனா காலத்தில் ஜவுளி பொருட்கள், தானியங்கி, ஆயத்த ஆடைகள், பிளாஸ்டிக் உள்ளிட்ட சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களை மூடி கிடைக்கின்றன. இதனால் அவர்களால் எப்படி மின்சார கட்டணம் செலுத்த முடியும் ? மீண்டும் தங்கள் தொழிலை தொடங்குவதற்கு அடிப்படை பொருளாதார ஊக்குவிப்பு பற்றியெல்லாம் அதிமுக அரசு அக்கறை இருப்பதாக தெரியவில்லை என்றும் முக.ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.