ஐ.என்.எக்ஸ் வழக்கில் ப.சிதம்பரம் டெல்லி CBI சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார்.
ஐ.என்.எக்ஸ் வழக்கில் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் நிறைவடைந்த நிலையில் டெல்லியில் இருக்கக்கூடிய CBI சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிதம்பரம் அழைத்து வரப்பட்டார். திகார் சிறையில் இருந்து அவர் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கும் சிரித்த முகத்துடன் வந்திருந்தார்.இதில் ப.சிதம்பரத்திற்கு மேலும் காவல் நீட்டிப்பு செய்ய சிபிஐ , அமலாக்கத் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.அதே வேளையில் ப.சிதம்பரதிற்கு கூடுதலாக உணவுகளை வழங்கவேண்டும் என்பது அவர்களது பிரதான கோரிக்கையாக இருக்கிறது.
கடந்த 15 நாட்களாக அவர் சிறையில் இருந்த காலத்தில் ப. சிதம்பரம் 3 கிலோ அளவுக்கு எடை குறைந்துள்ளதாக சொல்லப்படுகின்றது. மேலும் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் வருக்கு கூடுதலான உணவு வெளியிலிருந்து கொடுப்பதற்கு , உள்ளே வைப்பதற்கு கோரிக்கை வைப்பதோடு ப.சிதம்பரத்தின் வயது , அவர் வகித்த பதவியை கருத்தில் கொள்ள வேண்டும் என்பதை ப.சிதம்பரம் தரப்பு வாதங்கள் வைக்கப்பட இருக்கின்றது என்று தெரிகின்றது.